இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. சில குறிப்பிட்ட வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மெட்ரோ ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மெட்ரோவின் கதவை தானே திறக்க தள்ளி பார்க்கும் பாவனை செய்ததோடு, மெட்ரோவை நிறுத்த டான்ஸ் செய்து டிராமா செய்தார்.

இந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வைரலான நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள வாலிபரின் நடத்தையை கண்டு அங்கிருந்த பயணிகள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் மட்டும் அந்த மனிதரின் வேடிக்கையான செயலை பார்த்து சிரித்தார். இதுதான் அந்த வீடியோவின் சிறப்பு என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு இவரை “மெட்ரோவின் ஹீரோவாக்க வேண்டியுள்ளது”, “கதவை திறக்க அவர் கண்டுபிடித்த புதிய வழி” என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.