
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர் ரேவா மாவட்டத்தில் உள்ள குர் பகுதியில் மிகவும் பழமையான பாபா பைரவர் கோவிலுக்கு சென்றுள்ளனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு குடித்துவிட்டு வந்த 8 நபர்கள் புதுப்பெண் மற்றும் அவரது கணவனை அடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்பு அந்த புதுப் பெண்ணை அவரது கணவன் கண்ணெதிரே எட்டு நபர்களும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியில் யாரிடம் சொன்னாலும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து மறுநாள் காவல்துறையில் புதுமண தம்பதிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த எட்டு நபர்களையும் தீவிரமாக தேடி கண்டுபிடித்துள்ளனர்.ராம்கிஷான் கோரி, தீபக் கோரி, ராவிஷ் குப்தா, சுசில் கோரி, ராஜேந்திர கோரி, கருட் கோரி, லவ்குஷ் கோரி, ராஜ்நிஷ் கோரி ஆகிய 8 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த எட்டு பேருக்கும் 19 முதல் 21 வயதிற்குள் தான் இருக்கும்.இதில் ராஜ் நிஷ் கோரி மட்டும் தப்பி ஓடி உள்ளார் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.