துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் 4,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அடுத்து துருக்கி அரசானது 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவும் அடிப்படையில் இந்தியா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி உள்ளது. மேலும் மோப்ப நாய் படையையும் மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துப்பொருட்கள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பிற உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது.