கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தின் போது ஜிஎஸ்டி வரி தொடர்பாக அன்னபூர்ணா சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் நேற்று ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் திடீரென தான் பேசியதற்கு நிர்மலா சீதாராமனிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜகவின் செயலுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக எம்பி கனிமொழி, ஜோதிமணி மற்றும் ராகுல் காந்தி என பல அரசியல் பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனிடம் பேசியது தொடர்பான வீடியோவை பாஜகவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நிர்மலா சீதாராமனிடம் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ வெளியானதற்கு அன்னபூர்ணா உணவுக உரிமையாளர் சீனிவாசனிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட பாஜகவின் செயல்பாடுகளுக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மேலும் அவருடைய பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.