மத்திய மந்திரி நிதின் கட்காரி தற்போது பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்ததாக கூறியது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பத்திரிக்கை நிருபர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அதாவது சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூறுவதாக அவர் கூறிய நிலையில், எதிர்காட்சியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் வந்து நீங்கள் பிரதமரானால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று கூறினார். அதே நேரத்தில் அந்த நபரின் பெயரை அவர் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் நீங்கள் ஏன் பிரதமராக கூடாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கேட்ட நிலையில் நீங்கள் ஏன் எனக்கு ஆதரவு தர வேண்டும்.

நான் எதற்காக உங்களுடைய ஆதரவை பெற வேண்டும் என்று நிதின் கட்காரி கேட்டுள்ளார். அதோடு என்னுடைய வாழ்க்கையில் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை எனவும் அந்த நபரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு என்னுடைய அமைப்புக்கு நான் விசுவாசமாக இருக்கிறேன். நான் எந்த ஒரு பதவிக்காகவும் சமரசம் செய்து கொள்ள போவது கிடையாது. என்னுடைய மன உறுதி தான் எனக்கு மிகவும் முக்கியம் என்று கூறினார். மேலும் நிதின் கட்காரி தன்னிடம் நீங்கள் ஏன் பிரதமராக கூடாது என்று கேட்டதாக கூறிய விஷயம் தற்போது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றள்ளது.