வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுபற்றி தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல. எனவே நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.