சமீபகாலமாக மனிதர்கள், விலங்குகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவது சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. இதுபோன்று சமீபத்தில் ஒரு நபர் நாயை ரயிலில் இருந்து தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், வடகிழக்கு ரயில்வே பிரிவை சேர்ந்த ஒரு ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ரயில் மெல்ல நகர தொடங்கியவுடன் அந்த காம்பார்ட்மெண்டில் இருந்து ஒரு நாயை வெளியே தூக்கி வீசினார். அந்த நாய் தூக்கி வீசிய நபருடையதா அல்லது தெரு நாயா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த தேதி மற்றும் இடம் குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது.

மேலும் இந்த வீடியோவிற்கு பிரபல தொலைக்காட்சி நடிகை கரிஷ்மா தன்னாவும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதில் அவர் கூறியதாவது, “வெட்கக்கேடான நடத்தை, அருவருப்பானது இந்த வீடியோ என்னை கொதிக்க வைக்கிறது” என தன்னா கருத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல விலங்குகள் நல ஆர்வலர்களும்,  இது போன்ற செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருகிறது.