
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அண்ணா திமுக என்பது மனிதன் ஆரம்பிச்ச கட்சி அல்ல, அது புனிதன் ஆரம்பிச்ச கட்சி. எம்.ஜி.ஆர். என்கின்ற புனிதன் ஆரம்பிச்ச கட்சி. இதற்கு அழிவே கிடையாது. எத்தனை மினி கிளினிக். 2000 அம்மா மினி கிளினிக் ஏழை – எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அந்த மினி கிளினிக்கை மூடிய பெருமைக்குரிய கட்சி, ஆட்சி தி.மு.க.
DMK ஆட்சிக்கு வந்தவுடனே ஒரே கையெழுத்துல நீட் தேர்வை ரத்து செய்யறேன்னு சொன்னவங்க… ஒரே கையெழுத்துல… மினி கிளினிக்கை முடிட்டாங்க. 2000 மினி கிளினிக் -கை மூடியாச்சி. திமுக செய்த முதல் சாதனையே அதான். ஆயிரம் ரூபாய் அனைத்து மகளிர்களுக்கும், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் சொன்னார்கள். கொடுத்தாங்களா ?
அதிலும் பாதி பேருக்கு குடுத்து, குடுக்காம… பிரச்சனையை இழுத்து, அங்க வா…. இங்க வான்னு… சொல்லி, நொந்து நூலாக்கி அவர்களே ரூபாயே வேண்டாம் என்று சில பேர் போய்ட்டாங்க. மக்களை ஏமாற்றுவதற்காக தான் தி.மு.க இன்று ஆட்சியில் இருந்து…. மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
வருங்காலத்தில் அண்ணா தி.மு.க ஆளுகின்ற இடத்தில் வருகின்றது. முதலமைச்சராக எடப்பாடி வர இருக்கின்றார். அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் வர இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலே ஒரு கூட்டணி அதற்குப் பெயர் ”இந்தியா கூட்டணி” கிடையவே கிடையாது… அது இத்தாலிக் கூட்டணி. இந்திய கூட்டணி என சொல்லவே கூடாது. அது இத்தாலி கூட்டணி என விமர்சித்தார்.