ஜப்பான் நாட்டில் போக்குவரத்து துறையில் தற்போது புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜப்பான் மக்கள் மிதிவண்டி பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இதனால் ஜப்பானில் மிதிவண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் அதிகப்படியான விபத்துகளும் ஏற்படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு மிதிவண்டி வாகன விபத்து சுமார் 72 ஆயிரம் ஆகும். இது மொத்த விபத்துகளில் 20% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்து துறையில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி மிதிவண்டி ஓட்டுபவர்கள் சாலைகளில் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்தவோ, பேசவோ, இணையத்தை பார்க்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அல்லது 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதே போல் மது அருந்திவிட்டு மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது 2 3/4 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.