ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான புதிய சட்டத்தை தாலிபான்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பெண்கள் வீட்டுக்கு வெளியே பேசுவது மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குவது போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தடிமனான துணிகளால் உடலையும், முகத்தையும் மூடிக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் தாலிபான்கள் கூறியுள்ளனர். அதாவது பெண்களின் குரலால் ஆண்களின் எண்ணங்கள் சிதறி விடும் என்று கூறுகின்றனர்.

இதை தவிர்க்க பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு தாலிபான் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டங்களை ஹலால் மற்றும் ஹராம் என்று இருவகையாக பிரித்துள்ளனர். இந்த சட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு பல மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். முன்னதாக பெண்கள் வீட்டில் சத்தமாக பேசவும், பாடவும் கூடாது என்று தடை விதித்திருந்தது.

இந்த புதிய சட்டத்தை மீறி பெண்கள் மற்றும் சிறுமிகள் நடந்து கொண்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதையடுத்து இம்முறை ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முழங்காலுக்கு கீழ் வரை உடை அணிந்திருக்க வேண்டும். அதேநேரத்தில் வாழும் மக்களை புகைப்படம் எடுக்க கூடாது என்று தடை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் திரும்ப ஆட்சி அமைத்ததால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.