
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உலகநாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று திரை உலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கையில் என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், திரை துறையை சார்ந்தவர்களும், மக்கள் நீதி மைய கட்சி தொண்டர்களும், ஊடக நண்பர்களும் என்னை கமலஹாசன், கமல் அல்லது KH என்றோ குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு அளித்த பட்டங்கள், அடைமொழிகள் வழங்கியவர்களுக்கு எவ்வித மரியாதை குறைவு இல்லாத வண்ணம் இந்த பெயரை துறக்கிறேன். இது நான் பல கட்ட யோசனைகளுக்கு பிரிவு எடுத்த முடிவு இந்த முடிவுக்கு வருந்துகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே நடிகர் அஜித் இதுபோல் முடிவு எடுத்த நிலையில் அடுத்தபடியாக கமலஹாசன் அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் கமலஹாசன் அவர்களை உலகநாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் விண்வெளி நாயகன் ஆவார். விண்வெளி நாயகன் என்பவர் ஒருவராக தான் இருக்க முடியும் அது கமலஹாசன் தான், இந்த பெயர் வேறு யாருக்கும் பொருத்தமாக இருக்காது என அவர் கூறினார். இனிமேல் அடிக்கப்படும் போஸ்டர்களில் விண்வெளி நாயகன் என்றுதான் குறிப்பிட வேண்டும், கமலஹாசனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறோம் என கூறியுள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.