இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி தங்கள் மகள் குட்டி இளவரசி சார்லோடை பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக தயார் படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி சார்லோட் இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் பணியாற்றும் ஒருவராக அல்லாமல் நிறுவனம் ஒன்றில் தமது கல்விக்கு தகுந்த வேலைக்கு தேடிக்கொள்ளும் ஒருவராக இளவரசி சார்லோட் தம்மை தயார் படுத்திக் கொள்வார் என கேட்-வில்லியம் தம்பதி கூறியுள்ளது.

ஏற்கனவே மன்னராக முடிசூட்டும் முன்னரே ராஜா குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளில் இனி குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள் என சார்லஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியிட்டது. மன்னர் சார்லஸ் சார்பில் தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

தற்போது கேட் மற்றும் வில்லியம் தம்பதி தங்கள் மகள் குட்டி இளவரசி சார்லோட்டை தனித்துவமாக வளர்க்க முடிவு செய்துள்ளனர். தற்போது ஏழு வயதாகும் சார்லோட் எதிர்காலத்தில் தமது கல்விக்கு தகுந்த வேலையை தேடிக் கொள்வார் என தகவல்கள் கசிந்துள்ளது. குட்டி இளவரசி சார்லோட் முழுநேர ராஜ குடும்பத்தை சேர்ந்த உறுப்பினராக இல்லாமல் வேலைக்கு செல்லும் நபராக மாறுவார் என்றால் அவர் கண்டிப்பாக ராஜா குடும்பத்தின் தனிப்பட்ட விதிகளை மீற தயாராக வேண்டும்.