செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க…  மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

ஓபிஎஸ் ஆணைக்கிணங்க கழகத்தினுடைய துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜே.சி.டி சி பிரபாகரன் அவர்கள் அந்த ஏற்பாட்டை செய்து வருகிறார். அண்ணன் பண்ருட்டியார் கழக ஆலோசகர் உள்ளிட்ட அனைவரும் அதிலே கலந்து கொள்கிறோம். மிக முக்கியமான அறிவிப்புகள்…வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் ?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? என்பதை தமிழக மக்கள் ஆதரவோடு எதிர்பார்க்கின்ற வகையில் அன்றைய தினம் எங்களது அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிக்க இருக்கிறார்கள். ஒரு முக்கியமான கூட்டமாக இருக்கும். பல மாவட்ட கழக செயலாளர் கூட்டம் நடந்தது.

இன்னைக்கு பார்த்தீங்கன்னா….  நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்,  சேலத்திலும் சேர்த்து பார்த்தீங்க…  எவ்வளவு பெரிய கூட்டம் ? கூடியது.  இதற்க்கு முன் யாரும் இல்லைனு சொல்லிட்டு இருந்தாங்க. இந்த கூட்டம் அனைத்து இடங்களிலும்… வருவாய் மாவட்டங்களில்… ஆர்ப்பரித்த கூட்டம். கொடநாடு – கொள்ளை சம்பந்தமாக விரிவாக நடவடிக்கை எடுத்து,  யார் குற்றவாளிகள் என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் ? சயான் சொல்லி இருக்கின்ற  பழனிச்சாமியா ?  என்பதை நாட்டிற்குச் சொல்ல வேண்டும் என்பதை  நிலை நிறுத்தி நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றது.

திருச்சி திருப்புமுனையாக…  கடல் போல கூடிய கூட்டம். கடல் அலை என திரண்டு எழுந்த தொண்டர்களும் – மக்களும். இதெல்லாம் பார்த்து பொறுக்க முடியாத பழனிச்சாமி,  இன்னைக்கு அந்த திருச்சி மாநாட்டிற்கு எதிர்ப்பா ஒரு மாநாட்டை நடத்துனும் என  சொல்லி,  சினிமா தியேட்டர் வரைக்கும் போய்…  சினிமாவுக்கு போறவங்களுக்கு எல்லாம் டிக்கெட் வாங்கிட்டு வர்ற அளவுக்கு..  போய் இருக்கின்ற ஒரு நிலைமை நாம் பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.