
சனாதானத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும், பாஜகவில் மீண்டும் இணைய போவதில்லை என நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் எஸ். வி. சேகர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட நிலைமை குறித்து அவர் திறந்தவெளியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “மோடி கட்சி சேர மட்டும் தான் சொன்னாரு ஆனா பதவி கிடைச்சதும் சரியா செயல்பட முடியாமல் பாஜகவினர் பாட்டிலில் போட்ட மூடி போன்று என்னை மூடிவிட்டார்கள்.மேலும் வெறும் பெயருக்காக ஒரு பதவியில் இருந்து பயனில்லை என்றும், முக்கியத்துவம் இல்லாத இடத்தில் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே சிறந்தது எனக் கூறினார்.
இந்நிலையில் பவன் கல்யாணின் இந்துத்துவ உணர்வுகளை மதிக்கிறேன் என்றாலும், சனாதானத்தை அழிக்க முயற்சி செய்யும் எவருக்கும் வெற்றியில்லை என அவர் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டாக கடலிலிருந்து ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து, கடலை காலி செய்வது போல சனாதானத்தை அழிக்க முடியாது என்பதையும், யாராவது அதை முயற்சி செய்து பார்த்தால், அவர்கள் தோல்வி அடைவார்கள் என அவர் சாட்டினார்.
மேலும் அவர் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், “எப்போதும் இரண்டு கை தட்டினால் தான் சவுண்டு வரும், ஒரு கை சைலன்டாக இருந்தால் சத்தம் அடங்கிவிடும்” எனச் சொல்லியுள்ளார். இதனால், தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாகவும், உதயநிதி யாரையும் எதிர்ப்பதற்காக வம்பில் இழுக்க விரும்பவில்லை என எஸ். வி. சேகர் தெரிவித்தார்.