
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்திருந்தார். இந்நிலையில் தான் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றாலும் தற்போது ஆஸ்கார் விருதை ஒரு தனியாக பையில் போட்டு எடுத்துச் செல்வதாக குனீத் மோங்கா கூறியுள்ளார்.
அப்படி எடுத்துச் செல்லும்போது விமான நிலைய சோதனையில் அதிகாரிகள் ஆஸ்கார் விருதை காண்பிக்குமாறு கூறுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஆஸ்கார் விருதுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்களாம். இதேப்போன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள் கூட ஆஸ்கார் விருதுடன் மட்டும் புகைப்படம் எடுக்கிறார்கள். விமான நிலையத்திலும் சரி உறவினர்களும் சரி தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்காமல் ஆஸ்கார் விருதுடன் மட்டும் புகைப்படம் எடுப்பது தன்னுடைய மனதுக்கு மிகுந்த வேதனையை தருவதாக குனீத் மோங்கா கூறியுள்ளார்.