கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தற்போது வரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவர்தான் நீடித்து வருகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதற்கான ஒரு மிக முக்கியமான சான்றாகத்தான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வரக்கூடிய பிரபுல் பட்டேல் அவர்கள் அந்த கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே இவரும் சுப்ரியா சுலேவும் அந்த கட்சியின் செயல் தலைவர்களாக அந்த கட்சியின் 25 வது ஆண்டு தொடக்க விழாவின்போது அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இதனை அடுத்து சரத் பாவார் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனது தலைமை பதிவியிலிருந்து மற்றவர்களுக்கு வழிவிடுகிறார் என்பதான ஒரு பேச்சாக மாறிவந்த நிலையில்,

திடீர் திருப்பமாக பிரபுல் பட்டேல், அஜித் பவர் உள்ளிட்டோரெல்லாம் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கின்றார்கள். விளங்கியதோடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவை ஆண்டு கொண்டிருக்கின்ற சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் பாஜக கட்சிக்கு தனது ஆதரவையும் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் கட்சி தாவிய சட்டமன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை ஈடுபட்டு இருக்க கூடிய சூழ்நிலையில்… நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே உள்ளிட்டோரை தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.

இருவரையுமே நீக்க வேண்டும் என்று சற்று நேரத்துக்கு முன்புதான் மற்றொரு செயல் தலைவரான சுப்ரியா சுலே அவர்கள் அந்த கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்பொழுது அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

சுனில் தாக்கரே அவர்களும் நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக இதே சுனில் தாக்கரேவை  நியமிப்பதாக பிரபுல் பட்டேல் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார்.

அந்த சந்திப்பு அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே இருந்த இருவருமே கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இருவருக்கும் கட்சிக்கும் இனி எந்த சம்மதமும் இல்லை.

அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்ற ஒரு அறிவிப்பும் இந்த நீக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. கட்சியின் விரோத செயலில் ஈடுபட்டார்கள் என்று கூறி தற்பொழுது அவர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

பிரபுல் பட்டேலை பொருத்தவரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக இருந்திருக்கிறார். மத்திய அமைச்சரவையில் முக்கியமான பதவிகளை வைத்திருக்கிறார். 25 ஆவது காங்கிரஸ் கட்சியின் 25 வது கொண்டாட்டத்தின் போது தான் சரத் பவார்  அவர்கள் பிரபுல் பட்டேலை செயல்தலைவராக நியமித்திருந்தார்.

ஆனால் கூட கடந்த சில மாதங்களாகவே குளறுபடி இருந்து வந்தது. அஜித் பவர் அவர்கள் விலகுவார் என்று சொல்லி வந்த நிலையில், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத திருப்பமாக பிரபுல் பட்டேல் அந்த கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு பாதைக்கு சென்று இருக்கிறார்.   இவர்களும் நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

அதற்காகத்தான் புதிய நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருந்தே பல்வேறு மாற்றங்களை நாங்கள் மேற்கொள்ள போகிறோம் என்று சற்று நேரத்துக்கு முன்பு தான் பிரபுல் பட்டேல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வந்தார்.

இப்படி  இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவரை நீக்குவது,  புதிய நிர்வாகிகளை நியமிப்பது போன்றவை எல்லாம் மேற்கொள்ளப்பட்டு கடுமையான குழப்பம் என்பது ஏற்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு தரப்பில் ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் உடனடியாக நாடப்போகிறார்கள்.

கட்சி காண உரிமையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இருவரும் ஈடுபட போகிறார்கள் என்பதான தகவல் எல்லாம் கிடைத்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  அடித்தளமே தற்போது ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது என்பதை இதன் மூலமாக புரிந்து கொள்ள முடியும்.