
சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்படும் நோ பார்க்கிங் போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீதிபதி கூறினார். அப்போது நீதிபதி, அனுமதியின்றி வீட்டின் முன்பு கட்டப்படும் நோ பார்க்கிங் போர்டுகள் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுதொடர்பான விதிமுறைகளை இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.