
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரு பெயர் ஆர்.என் ரவி கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ரவி. உங்களுக்கு நான் ஒரு சவால் விடுறேன். உங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி…. உங்களுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கிற மாதிரி…
What authority do you have ? You have no rights. நீங்க உங்களுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு, தமிழ்நாட்டுல ஏதோ ஒரு தொகுதி.. நீங்களே முடிவு பண்ணுங்க, நான் இல்ல. எங்க கழகத்தோட முக்கிய தலைவர்கள் யாரும் கிடையாது… எங்க திராவிட முன்னேற்ற கழகத்தோட கடை கோடி தொண்டன நிக்க வச்சு, உங்களால ஜெயிக்க முடிந்தது என்றால் ? மக்களை சந்திங்க…
உங்களுடைய சித்தாந்தங்களை எல்லாம் எங்க தமிழ்நாட்டு மக்களிடம் போய் சொல்லுங்க. செருப்பு கழட்டி அடிப்பாங்க. நீங்க ஜெயிச்சுட்டு வாங்க, நீங்க சொல்றதெல்லாம் நான் கேட்கிறேன், நீட்டுக்கு ஆதரவா நானே வாரேன்.
அனிதாவில் ஆரம்பித்து, இந்த 21 மாணவர்களோட வீட்டுக்கும் நான் போயிருக்கேன். இங்க முக்காவாசி பேரு வீட்டுக்கு போய் இருக்கேன். எதுக்கு ? அந்த குழந்தைகளை பாக்குறதுக்கு இல்ல.. அந்த குழந்தைகளுடைய பிணத்தை பாக்குறதுக்கு… பெற்றோர்களை பார்த்து ஆதரவு சொல்றதுக்கு… ஒவ்வொரு பெற்றோரும் என்னுடைய கைய பிடிச்சுட்டு கெஞ்சுறாங்க என தெரிவித்தார்.