
இந்துகுஸ் மலைப்பகுதிகளில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது அண்மைக்காலத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம் என்பது ஏற்பட்டிருக்கிறது. 6.1, 5.6, 6.2, 5.9, 5.0 மற்றும் 4.7 என இப்படி ரிட்டர் அளவுகோளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் எல்லையொட்டி இருக்கக்கூடிய சீரத் என்ற பகுதியில் தான் இந்த நிலநடுக்கம் என்பது ஏற்பட்டிருக்கிறது.
இதில் பல கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தின் காரணமாக தற்போது வரை 2000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 78 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. பல இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது, பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இடைபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
Powerful earthquakes in Afghanistan have killed more than 2,000 people and injured more than 9,000, the Taliban administration said on Sunday, October 8, in the deadliest tremors in years in the quake-prone mountainous country.
Read on Rappler: https://t.co/uuuilOmo6m
— Rappler (@rapplerdotcom) October 8, 2023