செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும் சாலைகள்… ஆறு வழி சாலை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால்… அது மோடியை சாரும்……

சாதாரண மக்களுக்கும்  கழிப்பிடம் கட்ட வேண்டும் என்ற உணர்வோடு,  ஒவ்வொரு கிராமத்திற்கும்…. ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை இல்லாத இடங்களை தேடி தேடி கண்டுபிடித்து…. நிதியை கொடுக்கிறார்கள்….. ஆகவே கழிப்பிடத்திலிருந்து…. பொருளாதாரத்தில் இருந்து….நடுத்தர மக்களை காப்பாற்றுகிற வழியில் இருந்து….  அதேபோல நாட்டை காப்பாற்றக் கூடிய வகையிலும்…… நம்முடைய பாரத பிரதமர் அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்…

ஒன்றை எண்ணி பாருங்கள்….. நம்முடைய தமிழர்கள் உக்ரைன் போரை தடுத்து நிறுத்த முடியும். அது யாரால் என்று சொன்னால், மோடி என்று யார் சொல்கிறார்கள் ? உலகை பம்பரமாக சுழற்றிக் கொண்டிருக்கின்ற அமெரிக்க நாட்டின்  ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். உக்கிரன் போர் நிறுத்த வேண்டும் என்று சொன்னால்,  மோடி நினைத்தால் தான் முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மோடிஜி அவர்கள் இந்திய நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.