
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதிக்கு சாலைகள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பி விடுகிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டையில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே அங்கு உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி தர வேண்டும் என்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ஏவாவேலு சொல்லும்போது, ஏழு மீட்டர் மாநில நெடுஞ்சாலை 10 மீட்டர் ஆக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றார்கள். அதில் டோல்கேட் அமைக்கின்றனர். டோல்கேட்டுகள் கூடாது என மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறோம். அதேபோல முதலமைச்சர் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார். நான்கு வழிச்சாலை அமைத்தாலும், மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் நாங்கள் அமைப்பதில்லை என்று ஒரு முக்கியமான கருத்தை சொல்லி உள்ளார்.