
பாஜக தொண்டர்களிடம் பேசிய அக் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, போதை பொருள் கடத்தியதற்காக சிறையிலே இருந்தவனுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திலே மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு கொடுத்தது, தப்பா ? இல்லையா ? இப்போ NCBல என்ன சொல்லி இருக்காங்க ? மங்கைன்னு ஒரு படமா ? எனக்கு தெரியாது… நான் சினிமா படத்தில் ஈடுபாடு செலுத்துவதில்லை.. இந்தக் கோவில்ல கொள்ளையடிக்கிற கொலைகாரன்…. கோவிலில் அறநிலையத்துறையில் மந்திரியா இருந்துகிட்டு, நம்முடைய மோகன் சி லாசரஸ் மாதிரி அல்லேலூயா…. அல்லேலூயா அந்த மாதிரி கோஷம் போடுறவன்…
இவங்கள பாக்குறதுக்கு நேரம் பத்த மாட்டேங்குது…. இந்த மங்கை படத்தின் தயாரிப்பாளர் பற்றி எனக்கு தெரியல… நீங்க எல்லாரும் சொல்றீங்க, நான் சொல்லல…. அதனால ரகுபதி அண்ணன் கேஸ் போடுறதுன்னா…. வில்சன் மூலமா நல்ல வக்கீலா எடுத்துக்கோங்க….
வில்சன் எல்லாம் வேண்டாம்… வில்சன் மூலமா கேசு போறது எல்லாம் ராஜா மேல போடுறதில்ல… இத்தனை பேரு மேலயும் போடணும்…. அப்போ இந்த படம் எடுத்ததுக்கு ஜாஃபர் ஜாதிக் என்ன சொல்லி இருக்கிறான் ? முழு தொகையும் பைனான்ஸ் பண்ணவன் அவன்… அந்த முழு தொகையும் எந்த பணம் அதில் உபயோகப்படுத்தபட்டு இருக்கு.. ஒரு சீப் மினிஸ்டருக்கு இந்த கவலை வேண்டாம் என தெரிவித்தார்.