உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு டிபன் பாக்ஸில் அசைவ உணவு கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் அந்த மாணவனை சஸ்பெண்ட் செய்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் பள்ளிக்குச் சென்றார்.

இதுதொடர்பாக பள்ளி முதல்வரிடம் பேசினார், அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.