திமுக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் வட மாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநில மக்கள் பன்னிக்குட்டிகள் போல் பிள்ளைகளை பெற்று போடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பன்னிக்குட்டி போல் பிள்ளைகளை பெற்று மக்கள் தொகையை பெருக்கிக் கொண்ட நிலையில், தற்போது நம்முடைய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து விட்டது என கூறி தொகுதிகளை குறைக்க வேண்டும் என்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எல்லை நிர்ணயம் குறித்து தனது மாயையான நாடகத்தை நடத்தும் போது, அமைச்சர் அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் காண்பிப்பார் என்று நம்புகிறேன். இது அவர்களை அவமதிக்கும் வகையில் துஷ்பிரயோகம் செய்யவும், திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவு எடுத்தது போல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு பேசிய அமைச்சர் அன்பரசனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.