![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/09/e7070038ae5428366a0c56a302bdc1fd3efcaf7691ce32e522908f3a8f742480.webp)
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பேருந்து நடத்துனர், 5 கிலோ அரிசி பையை வைத்திருந்த கந்தசாமி சுப்பையாவிடம் லக்கேஜ் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் 5 கிலோ பை தானே வைத்துள்ளேன், எதற்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடத்துனர், கண் தெரியவில்லை என்றாலும் அரிசி, சீனி வாங்கி செல்கிறாய் அல்லவா, அதனால் லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை மறுத்த கந்தசாமியை அந்த பேருந்து ஓட்டுனர் பாதிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பார்வையற்ற கந்தசாமி சுப்பையா மிகவும் சிரமப்பட்டு அப்பகுதியை கடந்துள்ளார். அதன் பிறகு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பெயரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்தினரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என பாபநாசம் பணிமனையில் இருக்கும் போக்குவரத்து கழக இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.