
அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லூசியா போர்செத் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடு கூட இல்லாமல் இருந்துள்ளார். இந்தப் பெண் தற்போது வால்மார்ட் சூப்பர் சென்டரில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
இந்த லாட்டரி சீட்டில் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்துள்ளது. 5 மில்லியன் என்பது இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். மேலும் பரிசு வென்ற பெண்மணி நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். வீடு கூட இல்லாமல் இருந்து எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நினைக்கவே இல்லை எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.