தலைநகர் டெல்லியில் தற்போது புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்து எம்பிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் விசிக கட்சியின் எம்.பி ரவிக்குமாருக்கும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் இடம் பெறவில்லை என தற்போது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவராகவும் ஜனாதிபதி இருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா அழைப்பிதழில் அவரின் பெயர் கூட இடம் பெறவில்லை. ஒரு நாட்டின் ஜனாதிபதியை இப்படியா அவமதிப்பது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.