
இன்றைய காலகட்டத்திலும் திருமணங்களில் பின்பற்றப்படும் மிக தீய பழக்கம் வரதட்சணை. இது தொடர்பாக அரசும் பல சட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் அந்த சட்டங்களின் தாக்கம் நிஜ வாழ்க்கையில் பின்பற்றப்படவில்லை. சில இடங்களில் இன்றும் திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படும் நிலமை உள்ளது.
வரதட்சணை வழங்குவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமகனுக்கு மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்களுக்கும் தனித்தனியாக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு சீர்வரிசை பொருள்கள் வகைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
#viralvideo में बताया गया है कि दूल्हे के साथ साथ उसके परिवार को भी दहेज दिया गया!
अब कुछ लोग सोशल मीडिया पर दूल्हे के परिवार वालों के साथ साथ सभी लड़कों पर तंज कस रहे हैं
जबकि हम अच्छे से जानते है कि आज के दौर में जितनी भी शादियां हो रही हैं लड़की का बाप खुद ब खुद दूसरों के… pic.twitter.com/f77TKO20sJ— 🌿R_ARFAH🌿 (@AMREEN_BANO7860) April 13, 2025
அதில் இடம்பெற்றுள்ள கார் முதல் அனைத்து பொருள்களிலும் ஒவ்வொரு பொருளும் யார் யாருக்கு என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு திருமண சீர்வரிசைப் போல் அல்லாமல் ஒரு ஷோரூம் போல் தெரிகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலர் இதுபோன்ற வரதட்சணை வழங்கும் வீடியோ பிற குடும்பங்களையும் மோசமாக பாதிக்கும். இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சில மாப்பிள்ளை வீட்டார்கள் திருமணம் செய்யும் பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என விமர்சனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வீடியோக்கள் சமூகத்தில் மோசமான எடுத்துக்காட்டாகவும், பலருக்கும் ஆசை மற்றும் பேராசை ஏற்படுத்தும் சம்பவமாகவும் உள்ளது என பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.