
தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின் சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில மாதங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த செய்தி சோசியல் மீடியாவில் நயன்-விக்கி திருமணத்தை அடுத்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இத்திருமணத்தை தொடர்ந்து இவர்கள் youtube சேனல்களுக்கு பேட்டி அளிப்பது, புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வது என ஆக்டிவாக இருக்கின்றனர்.
சோசியல் மீடியாவில் தங்களுக்கு வரும் விமர்சனங்களை எல்லாம் கவலைப்படாமல் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமின்றி தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் முருகனிடம் வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram