தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  கழகத்தினுடைய நிர்வாகிகள், அதற்கு பின்னால் பூத்து கமிட்டி, அதற்கு பின்னாலே உறுப்பினர் படிவங்கள் சேர்ப்பது. இது எல்லாம் முழு ஆற்றலோடு,  ஆர்வத்தோடு  நாம் முழுமையாக நூற்றுக்கு நூறு சதவீதம் முடித்தோம்  என்று சொன்னால் ? 2024 மட்டுமல்லாமல்,  2026இல் வெற்றி பெற போவது…. உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாம் தான் என்பதை நாம் நிறுத்தி நிரூபித்துக் காட்டுகின்ற நிலையை நாம் உருவாக்குவோம்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான பேச்சாற்றல், இதயத்தில் இருந்து வருகின்ற அந்த குரல். அவருடைய பேச்சாற்றலை கேட்டு கேட்டு  தத்துவமான பேச்சு , நியாயமான பேச்சு, தர்க்கமான பேச்சு,  நீதியான பேச்சு. அவருக்கு பொய் சொல்ல தெரியாது. புறம் சொல்ல தெரியாது,  நம்பிக்கை துரோகம் செய்தது கிடையாது. அனைவரையும் ஈர்க்கின்ற சக்தியாக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார். சாதாரண தொண்டனாக இருந்து,  படிப்படியாக யாராலும் வீழ்த்த முடியாது என்ற காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி,  தர்மத்தை நிலைநாட்டி தமிழகத்தில் நல்ல திராவிட ஆட்சி நிறுவுவதற்கு அவர் தான் அஸ்திவாரமாக இருந்தார்.

இன்றைக்கு  சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக….  கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளராக வருவதற்கு காரண கர்த்தா,  மூல காரணம் யார் என்று சொன்னால் ? பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் என்பதனை நாம் இன்றைக்கு நன்றியோடு நினைவு கூறுகின்றோம். ”உண்மையான மாநாடு” மாநில மாநாடு நடத்தப்படும் என்பதை  நான் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து,  பொறுமையாக இருந்து இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியையும் – வணக்கத்தையும் தெரிவித்து  கொள்கின்றேன் என பேசி முடித்தார்.