
மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சகிலா. அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சகிலா கலந்து கொண்டுள்ளார். இவர் youtube சேனல் நடத்தி வரும் நிலையில் பிரபலங்கள் பலரை பேட்டி எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சகிலா கொடுத்த ஒரு பேட்டி தற்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பல நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகிறார்கள்.
இதேபோன்று தமிழ் சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள் இருக்கிறது என்று நடிகை ஷகிலா பேட்டி கொடுத்துள்ளார். அதோடு புதிய நடிகர்களை வளர விடாமல் தங்களுடைய வாரிசுகளை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வார்கள் என்றும் முயற்சி செய்துள்ளார். முதலிலேயே தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என மேனேஜர் நடிகைகளிடம் பேசி விடுவார். முக்கால்வாசி படம் முடிந்த பிறகு தங்களை படத்தில் இருந்து நீக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் நடிகைகள் மறுப்பு தெரிவிப்பார்கள். இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இது தொடர்பாக அவர்கள் குடும்பத்தினரிடம் கூட சொல்வது கிடையாது என்று கூறினார்.