மலையாளத் திரையுலகில் நடிகர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகைகள் மட்டுமின்றி, நடிகை ஒருவரின் தாயாரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபலமான மலையாள நடிகை புகார் அளித்துள்ளார். தயாரிப்பு பிரிவில் பணியாற்றுபவரும், இயக்குனர்களும் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததுடன் மிரட்டுவதாக சந்தியா புகார் தெரிவித்தார்.

இவ்வாறு மலையாள திரையுலகில் நிலவி வரும் பாலியல் புகார்கள் குறித்து நீதிபதி ஹேமா மற்றும் அவரது குழுவினர் விசாரணை நடத்தினர். அதன் பின்பு  மாநில முதலமைச்சர் பிரனாய் விஜயனிடம் அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு நடிகைகள், இயக்குனர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு செவ்வாய்க்கிழமையன்று விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2 நடிகைகள் பிரபல மலையாள நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு மனு அளித்துள்ளனர்.

இதுபற்றி பேசிய சந்தியா, நடிகர் முகேஷ் பாலியல் ரீதியாக தனக்குத் தெரிந்த நடிகையுடனும் அவரது தாயாரிடமும் பாலியல் ரீதியாக அத்துமிரலில் ஈடுபட்டதாக கூறினார். இந்த புகார் தற்போது மலையாள திரை உலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.