
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா அரசை பொறுத்தவரை ஏற்கனவே முடிவு எடுத்து மீனவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தாச்சு…. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தோம். இந்த அரசை பொருத்தவரை தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். கொடுத்து என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் ? மலையில் வேட்டையாடுபவர்கள் மலைவாசிகள்….. அதேபோல் கடலில் வேட்டையாடுபவர்கள்…. மீன்படி என்பது வேட்டையாடும் தொழில்.
அந்த அடிப்படை தன்மை வைத்து தான் அம்மாவை பொறுத்தவரை பழங்குடியின மக்களில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி…. அன்னைக்கு உறுதியாக இருந்து, நடவடிக்கை தொடர்ச்சியாக எடுத்தோம். கிட்டத்தட்ட DMK ஆட்சிக்கு வந்து 30 மாதம் ஆகிறது…. 30 மாதங்களில் இந்த அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை மீனவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
தேர்தல் காலத்தில் வழக்கம்போல் கொடுக்கிறான் வாக்குறுதி எல்லாம் இன்றைக்கு நிறைவேற்றவில்லை என்று அந்த பெரிய அளவிற்கு மீனவர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் மீனவர்களை பொறுத்தவரை பல்வேறு வகையில் இன்னைக்கு வஞ்சிக்கப்படும் நிலையில் கண்டிப்பாக தேர்தலில் சரியான பாடத்தை திமுகவிற்கு புகட்டுவார்கள் என தெரிவித்தார்.