இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பார் அண்ட் ரெஸ்டாரன்ட் நிர்வாகம் தீயணைப்பு துறை இடமிருந்து சரிவர சான்றிதழ் பெறவில்லை எனவும், இங்கு தீ விபத்து பாதுகாப்பு கருவிகளை சரியாக அமைக்கவில்லை என வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் மாநகராட்சி விராட் கோலியின் உணவகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் விராட் கோலியின் உணவகம் நள்ளிரவு 1 மணி வரை நடத்தப்படுவதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.