
2023 உலக கோப்பைக்காக ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.
2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தது. அவர்களுக்கு நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆப்கானிஸ்தானின் முதல் போட்டி பங்களாதேஷுக்கு எதிராக அக்டோபர் 7 ஆம் தேதி தர்மஷாலாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி புறப்படுவதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பல படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் ரஷித் கான், முஜீப் உர் ரகுமான் உட்பட பல ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றனர். இதனால், அவர்களுக்கு இந்திய மைதானம் நன்கு பரிச்சயம்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணி புறப்படுவதற்கு முன்பு X (ட்விட்டர்) இல் பல படங்களைப் பகிர்ந்துள்ளது. ரஷித் கான் உட்பட அனைத்து வீரர்களும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். இப்போது ஆப்கானிஸ்தானின் அனைத்து வீரர்களும் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அனைவரின் பார்வையும் முகமது நபி மற்றும் ரஷீத் கான் மீதுதான் இருக்கும். இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இளம் பேட்ஸ்மேன் இப்ராஹிம் ஜத்ரானின் ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். அவருக்கு சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லை, ஆனால் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இப்ராகிம் 19 ஒருநாள் போட்டிகளில் 911 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 4 அரை சதங்களும் அடங்கும். அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 362 ரன்கள் எடுத்துள்ளார். இதனுடன் சேர்த்து 24 டி20 சர்வதேச போட்டிகளில் 530 ரன்கள் அடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முதல் போட்டி வங்கதேசத்துக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே வரும் வெள்ளிக்கிழமை (29 ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான்,
நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.
ரிசர்வ் வீரர்கள் : குல்பாடின் நைப், ஷராபுதீன் அஷ்ரப், ஃபரித் அகமது மாலிக்.
AfghanAtalan have arrived in Thiruvananthapuram, India, ahead of their first warmup match against South Africa this Friday. 🤩#AfghanAtalan | #CWC23 | #WarzaMaidanGata pic.twitter.com/TcIST78syk
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 26, 2023
The arrival of team Afghanistan in India for the 2023 World Cup. pic.twitter.com/QlP7O0cnVo
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 26, 2023
India, Here we Come 🛫
AfghanAtalan are off to India to feature at the ICC Men's Cricket World Cup 2023. 🤩#AfghanAtalan | #CWC23 pic.twitter.com/9jGlZ6v8PQ
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 25, 2023