ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினர் ஜோதி நகர் முதல் தாலுகா அலுவலகம் வரை இருந்த மின்கம்பங்களை அகற்றி 10 அடி தூரத்தில் சாலை ஓரத்தில் நட்டனர். நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.