திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.
சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில் இருந்த மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றியுள்ளனர். இதனால் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், ஸ்ரீபுரம், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம் நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.