அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ப்ரூக்கிளின் கிரீன்பாயிண்ட் பகுதியில் ஒருவர், தனது தலைமீது ஃபிரிட்ஜை சமநிலையுடன் தூக்கி வைத்து, சைக்கிளில் சென்ற அதிர்ச்சிகரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீரனின் பெயர் லெஹ்-பாய் கேப்ரியல் டேவிஸ் என்பதாகும். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டில் சோபாவை தலைமீது வைத்து சைக்கிள் ஓட்டியிருந்தார், அதற்குப் பிறகு தற்போது இன்னொரு சாதனையை செய்துள்ளார்.

 

இந்த வீடியோவை ரெட்டிட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் மக்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். “Bro never skipped neck day”, “Only in New York”, “Give this man a delivery job immediately” என கமெண்ட்கள் குவிகின்றன.

வீடியோவில் தன் தலைமேல் ஃபிரிட்ஜை வைத்துக்கொண்டு, சுமார் 50 கிலோ எடையை சீராக தாங்கி சைக்கிளில் செல்கிற காட்சி பார்வையாளர்களை மிரளவைத்துள்ளது.

சிலர் இது போலியான வீடியோ என்று சந்தேகப்பட்டாலும், உண்மையில் இந்த காட்சி நேரில் பார்த்த நபர்களால் படம் பிடிக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. “நியூயார்க் என்பது எப்போதுமே வியப்புக்குரிய நகரம்” என நெட்டிசன்கள் இந்த காட்சியை வர்ணிக்கின்றனர்.