
தானே ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் எஸ்கலேட்டரில் தவறான வழியில் நடந்து செல்ல முயற்சிப்பதாக காணப்படுகிறார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மேலே செல்லும் எஸ்கலேட்டரில் அவர் எதிர் திசையில் இறங்க முயன்றதால் அதில் சிக்கிக்கொண்டார். அப்போது அதனை கண்ட அங்கிருந்த பிற பயணிகள் அவருக்கு உதவ முன் வரவில்லை.
இதைத் தொடர்ந்து சிறிது நேரம் சிக்கி போராடி கொண்டிருந்த அவரை அங்கிருந்த ரெட்டிட் என்ற பயனர் ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில் அந்த நபர் ஐந்து நிமிடங்களாக போராடியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 800 க்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளது. அதில் சிலர் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு கேலி செய்துள்ளனர். மேலும் எஸ்கலேட்டரில் இந்த நபர் தவறுதலாக சிக்கினாரா? அல்லது இது ஒரு பரிகாசமா? என்பது தெரியாத நிலையில் இந்த நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.