
மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர் உட்பட நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் திமுக ஐடி விங் ”கேஜிஎப்’‘ வார்த்தைகளை பயன்படுத்தி மீம்ஸ் போட்டோ கார்டு போட்டுள்ளது.
தமிழ் நடிகர் சத்யராஜை புரட்சி தமிழன் என்று அழைக்கக்கூடிய நிலையில் எடப்பாடி இந்த மாநாட்டின் மூலம் புரட்சி தமிழன் ஆகி உள்ளார். இதனால் திமுக ஐடி விங், எல்லாரும் ரஜினியோட சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடிச்சுக்கிட்டு இருந்தப்ப… ஒருத்தன் மட்டும் சத்யராஜோட புரட்சித்தமிழன் பட்டத்துக்கு ஆசைப்பட்டான் என்று மதுரை மாநாட்டு சம்பவத்தை மீம்ஸ் போடப்பட்டுள்ளது.
ஆகையால் அமாவாசை 😇🤣 pic.twitter.com/LAElTc1sUD
— DMK IT WING (@DMKITwing) August 20, 2023