
டெல்லிக்கு அருகே உள்ள கல்தான்புரி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல தற்காப்பு பயிற்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது பயிற்சியாளரான சதீஷ் (45) என்பவர் 11 வயதான மாணவி ஒருவரை தகாத முறையில் தொட்டு பாலியல் அத்துமீறயில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறினார். இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
அவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர் அல்ல என்றும் தற்காப்பு பயிற்சி வழங்குவதற்காக அமைப்பு மூலம் வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.