
பெங்களூரைச் சேர்ந்த நிஷா சி சேகர் என்பவர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியதில் ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுவது என்னவென்றால், ஸ்கூட்டர் வாங்கியதிலிருந்து தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருவதாகவும், கஸ்டமர் கேர் மென்பொருள் புதுப்பித்தும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்கூட்டரை பெற கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், முழுத் தொகையையும் ரொக்கமாகச் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அனுபவத்தை பகிர்ந்து, மற்றவர்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தனது ஸ்கூட்டரில் “விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்” என்று எழுதப்பட்ட பிளக்ஸ் கார்டை தொங்கவிட்டு, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.