
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூரில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கை எரிய வைப்பதற்காக ராமசாமி சுவிட்சை போட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.