கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகரில் கபிரியல்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 4 வயது சிறுமியை வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற அருள்(38) வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இத்தனை நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்த அருள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்தார்.
இதுகுறித்து கபிரியலிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கபிரியலை கைது செய்தனர். மேலும் ஒரு ஆண்டாக நடந்த உண்மையை மறைத்து அருள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.