திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் அபூபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீரப்பபுரம் தெரு வழியாக சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த காரின் கதவை திடீரென உள்ளே அமர்ந்திருந்த நபர் திறந்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய அபூபக்கரின் மோட்டார் சைக்கிள் கார் கதவு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அபூபக்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபூபக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.