திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவத்தூரில் மணி(60), கனகராஜ்(60) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் 16 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மணி, கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.