தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் அவருடைய சகோதரி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் இளம்பெண் அந்த இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசன் என்பவரிடம் கடன் வாங்கயுள்ளார். அந்த கடனை அடைப்பதற்காக அந்தப் பண்ணையில் இளம்பெண் வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தன்னுடைய அக்கா மீது உள்ள கோபத்தால் அந்த பெண் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணின் சகோதரி மற்றும் அவருடைய கணவர், இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசன் ஆகியோர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவருடைய கண்கள், முகம் மற்றும் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி போட்டு சித்திரவதை செய்துள்ளார்கள். அதை மட்டும் இன்றி  அவர் மீது டீசலை ஊற்றி தீ வைத்து சுமார் 11 நாட்கள் அவரை சித்திரவதை செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.