இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தேசிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழகத்தில் 22.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவ சுரப்பி பாதிப்புகளில் பிரதானமாக உள்ள சர்க்கரை நோய்க்கு நாடு முழுவதும் 19 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.7 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தமிழகத்தில் 22.3% பெயர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களான உத்தர பிரதேசம்,டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் பாதிப்பு உள்ளது. தென்னிந்திய உணவு பழக்க வழக்கமும் அது சார்ந்த மரபணுவும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்பிற்கான காரணம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சியின்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தரவுகள் கூறுகின்றன.