சீன நாட்டில் உள்ள லியோனிங் மாகாணத்தில் சியோன் நகர் உள்ளது. இங்கு ஒரு பிரபலமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 22 பேர் உடற்கருகி பலியாகினார். இது சீனாவில் இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்தாகும்.

 

இன்று மதியம் 12 மணிக்கு பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் 22 பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த அந்த நாட்டின் அதிபர் உத்தரவிட்டார். மேலும் இதற்கு முன்பு ஒரு வீட்டில்  ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.