உலகின் மிகப்பெரிய பணிப்பாறை தற்போது மீண்டும் நகர தொடங்கியுள்ளது. இந்த பனிப்பாறை லண்டனில் உள்ள கிரேட்டர் நகரை விட மிகப்பெரியது. இது A23a என்று அறியப்படுகிறது. இது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு இடத்தில் நகராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகர்கிறது. இந்தப் பனிப்பாறை கடந்த 1986 ஆம்‌ ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் என்ற பெரிய பனிக்கட்டியிலிருந்து உடைந்த நிலையில், இது வெட்டேல் கடலில் தெற்கு ஒர்கினி தீவுகளுக்கு அருகில் சேற்றில் சிக்கிக்கொண்டது.

இது கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து மெதுவாக வடக்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஜார்ஜியாவில் உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி நகரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில், பின்னர் அது வெப்ப தண்ணீரில் கலந்து சிறு சிறு கட்டிகளாக உடைந்து கரைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.